Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியாவின் கிடங்கு குத்தகை 12 சதவீதம் வளர்ச்சி

இந்தியாவின் கிடங்கு குத்தகை 12 சதவீதம் வளர்ச்சி

கிடங்கு வாடகை அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆண்டுக்கு 3 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் கிடங்குகள் குத்தகைச் சந்தை, நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 1.91 கோடி சதுர அடியாக உயர்ந்துள்ளது.

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் பிராங்க் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: உற்பத்தி நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக் நிறுவனங்களின் தேவை அதிகரித்ததே கிடங்குகள் குத்தகைச் சந்தை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

மொத்த குத்தகையில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து 76 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன. குறிப்பாக, மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக் நிறுவனங்களின் கிடங்கு குத்தகை 27 சதவீதமும், உற்பத்தி நிறுவனங்களின் குத்தகை 11 சதவீதமும் அதிகரித்துள்ளன. இ-காமர்ஸ் துறையில் 5 சதவீதமும், எஃப்எம்சிஜி துறையில் 101 சதவீதமும், நுகர்வோர் பொருட்கள் துறையில் 43 சதவீதமும் வளர்ச்சி பதிவாகியுள்ளது.

உற்பத்தி நிறுவனங்களின் கிடங்கு குத்தகையில் சென்னை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் மூன்றாவது காலாண்டில் குத்தகை 18 சதவீதம் அதிகரித்து 27 லட்சம் சதுர அடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தித் துறை கிடங்கு குத்தகையில், சென்னையின் பங்களிப்பு 22 சதவீதமாக உள்ளது. 

இது எட்டு முக்கிய நகரங்களில் அதிகபட்சமாகும். நடப்பாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில் கிடங்கு குத்தகை 5.59 கோடி சதுர அடியாக உயர்ந்து, 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் மும்பை 1.55 கோடி சதுர அடியுடன் முதலிடத்திலும், டெல்லி என்சிஆர் 1.01 கோடி சதுர அடியுடன் அடுத்த இடத்திலும் உள்ளன.

மேலும், கிடங்கு வாடகை அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆண்டுக்கு 3 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் சராசரி வாடகை சதுர அடிக்கு மாதம் ரூ.22.20 ஆக உள்ளது. புனேயில் ரூ.28.09, மும்பையில் ரூ.26.20 ஆக உள்ளது.

மேலும், தரமான 'கிரேடு ஏ' கிடங்குகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. மூன்றாவது காலாண்டின் மொத்த குத்தகையில் இவ்வகை கிடங்குகளின் பங்களிப்பு 66 சதவீதமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி விரிவாக்கம், இ-காமர்ஸ் வளர்ச்சி மற்றும் சரக்கு விநியோகச் சங்கிலி மேம்பாடு ஆகியவை வரும் காலங்களிலும் கிடங்குகள் சந்தையின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
சிறப்பு பேருந்துகளில் 1.40 லட்சம் பேர் பயணம்
அடுத்த செய்தி
Heavy rain in Kodaikanal hills disrupts normal life

தொடர்புடைய செய்திகள்